தமிழ்நாடு

பல்கலைக்கழகங்களில் ஆளுநர் ஆய்வு நடத்த வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

DIN


தமிழக பல்கலைக்கழகங்களில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆய்வு நடத்தி அங்கு நடைபெறும் முறைகேடுகள் குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி முறையில் விடைத்தாள்களில் கூடுதல் மதிப்பெண் வழங்க தனியாக லஞ்சம், பகுதி நேரப் படிப்பில் எம்.ஃபில்., ஆய்வுப் பட்டம் வழங்க லஞ்சம், பகுதி நேர எம்.ஃபில்., பயிலும் 1532 மாணவிகளிடம் வாய்மொழித் தேர்வு நடத்தாமலேயே, நடத்தியதாகக் கூறி மதிப்பெண் வழங்க லஞ்சம் எனப் பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன.
கல்லூரி ஆசிரியர் பணிக்கான செட் தேர்வை அன்னை தெரசா பல்கலைக்கழகம் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இந்த ஆண்டும் நடத்தியது. தேர்வின் இரண்டாம் தாளில் கேட்கப்பட்ட 50 கேள்விகளில் 43 கேள்விகள் முந்தைய இரு தேர்வுகளில் கேட்கப்பட்ட வினாத்தாள்களில் இருந்து எடுக்கப்பட்டவை. 
சிலர் எளிதாக வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இவ்வாறு செய்யப்பட்டதாகவும், இதன் பின்னணியில் ஊழல் நடந்திருக்கலாம் என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கடந்த இரு ஆண்டுகளாக நடத்தப்பட்ட செட் தேர்வில் தேர்ச்சி வழங்குவதற்காக ஏராளமானோரிடமிருந்து லஞ்சம் வாங்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர்கள், கெளரவ விரிவுரையாளர்கள் நியமனத்திலும் ஊழல்கள் நடந்துள்ளன. தேசிய உயர்கல்வித் திட்டப்படி பல்கலைக்கழக வளர்ச்சிக்கு வழங்கப்பட்ட நிதியிலும் முறைகேடுகள் நடந்துள்ளன. இவை குறித்து அரசிடம் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. பல மாவட்டங்களுக்குச் சென்று ஆய்வு நடத்தி வரும் ஆளுநர், அதற்குப் பதிலாக பல்கலைக்கழகங்களுக்கு சென்று ஆய்வு செய்ய வேண்டும். முதல் கட்டமாக அன்னை தெரசா பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்து, அங்கு நடந்துள்ள ஊழல்கள் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை-மும்பை அதிவிரைவு ரயில் 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

45 வயதினிலே..

நீட் தேர்வு ரத்து ரகசியம்- ஆர்.பி. உதயகுமார் கேள்வி

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

SCROLL FOR NEXT