தமிழ்நாடு

திமுக தலைவர் கருணாநிதி மறைவு: அதிர்ச்சியில் 5 பேர் சாவு 

DIN

மதுரை, திருப்பரங்குன்றம் மற்றும் தேனி மாவட்டம் போடியில், திமுக தலைவர் கருணாநிதி மறைவால் அதிர்ச்சியடைந்த அக்கட்சியினர் 5 பேர் உயிரிழந்தனர்.
மதுரை நாராயணபுரம் காலாங்கரையைச் சேர்ந்த அழகுராஜா (27), திமுக இளைஞரணி நிர்வாகியாக பொறுப்பு வகித்து வந்தார். திமுக தலைவர் கருணாநிதியின் மறைவு குறித்த செய்திகளை தொலைக்காட்சிகளில் புதன்கிழமை அதிகாலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.
மதுரை கருப்பாயூரணியைச் சேர்ந்த நாகராஜன் (45) அப்பகுதியில் திமுக வார்டு நிர்வாகியாக பொறுப்பில் இருந்து வந்தார். கருணாநிதி இறந்த அதிர்ச்சியில் மனமுடைந்து காணப்பட்ட நாகராஜன் வீட்டில் புதன்கிழமை மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
திருப்பரங்குன்றம்: மதுரை அருகே பெருங்குடியை அடுத்த பர்மா காலனியைச் சேர்ந்தவர் கணபதி. திமுக உறுப்பினரான இவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிகிறார். இவரது மனைவி இந்திரா (52), புதன்கிழமை மாலை கருணாநிதியின் அவரது இறுதி ஊர்வலத்தை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த போது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். 
போடி: இதேபோன்று, போடி பங்கஜம் பிரஸ் பின்புறம் வசித்தவர் கோவிந்தன் (55). பூக்கடை தொழிலாளியான இவருக்கு சுருளியம்மாள் என்ற மனைவியும், 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.13 -ஆவது வார்டு திமுக பிரமுகரான இவர், கருணாநிதி மறைவைத் தொடர்ந்து கவலையில் இருந்ததையடுத்து புதன்கிழமை மாரடைப்பால் உயிரிழந்தார்.
தற்கொலை: போடி அருகே ராசிங்காபுரத்தைச் சேர்ந்தவர் காளிமுத்து (45). தையல் தொழிலாளியான இவருக்கு, முத்துலட்சுமி என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவர், கருணாநிதி மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதை அறிந்து செவ்வாய்க்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதேபோன்று விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் 10 பேரும், கோவையில் ஒரு பெண்ணும், கருணாநிதியின் மறைவால் ஏற்பட்ட அதிர்ச்சியில் உயிரிழந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT