தமிழ்நாடு

ராஜாத்தி அம்மாளிடம் பணிவு.. கனிமொழிக்கு ஆசி.. ஸ்டாலினுக்கு ஆறுதல்: மோடியின் அஞ்சலி நிமிடங்கள் 

DIN

சென்னை: உடல்நலக் குறைவால் மரணமடைந்த கருணாநிதியின் உடலுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த திமுக தலைவர் கருணாநிதி ஆழ்வார்ப்பேட்டை காவேரி மருத்துவமனையில் செவ்வாய் மாலை 06.10 மணியளவில் மரணமடைந்தார். தற்பொழுது சென்னை ராஜாஜி அரங்கில் கருணாநிதியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு அரசியல் கட்சிப் பிரமுகர்கள், நடிகர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் அவரது பூத உடலுக்கு தொடர்ந்து அஞ்சலி  செலுத்தி வருகின்றனர் 

இந்நிலையில் உடல்நலக் குறைவால் மரணமடைந்த கருணாநிதியின் உடலுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேரில் வந்து மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

தில்லியிலிருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்த அவர் ஹெலிகாப்டர் மூலம் ராஜாஜி அரங்கை வந்தடைந்தார்.  அவருடன் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், மத்திய அமைச்சர்கள் பொன்னார் , நிர்மலா சீதாராமன் மற்றும் தமிழக பாஜக  தலைவர் தமிழிசை ஆகியோர் உடன் வந்தனர்.

அவர்களை திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு  ஆகியோர் வரவேற்று அழைத்து வந்தார்கள்.   

வந்தவர் கருணாநிதி உடல் அடங்கிய பேழைக்கு மலர் வளையம்  வைத்து, வணக்கம் தெரிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் உடலுக்கு அருகில்  நின்றிருந்த கருணாநிதியின் மனைவி ராஜாத்தி அம்மாளின் கைகளைப் பிடித்து, கண்களில் ஒற்றி ஆறுதல் கூறினார். பின்னர் அவரது மகள் கனிமொழியின் தலையில் கை வைத்து, ஆறுதல் கூறி பேசிக் கொண்டிருந்தார்.

பின்னர் அங்கிருந்த திமுக செயல் தலைவர் ஸ்டாலினிடம் சென்றவர் சிறிது நிமிடங்கள் தோளில் தட்டி பேசிக் கொண்டிருந்தார். பின்னர் முன்னர் வந்து பொதுமக்களை பார்த்து கை கூப்பினார். பிறகு திரும்பிச்செல்லும் வழியில் நடக்கத் துவங்கியவருடன் ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் உடன் சென்றனர்.

பின்னர் மீண்டும் இருவருடனும் மோடி தனியாக நின்று தீவிரமாக பேசிக்கொண்டிருந்தார். அதன் பின்னர் புறப்பட்டுச் சென்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்சனின் படத்தில் கவின்: படத்தின் பெயர் அறிவிப்பு!

செதுக்கிய சிலை... ஐஸ்வர்யா மேனன்!

டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா 3-வது வீரராக களமிறங்க வேண்டும்: முன்னாள் இந்திய வீரர்

வானத்து தேவதை..... அஞ்சலி!

ஓராண்டில் 674 காப்புரிமங்கள்: மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் சாதனை!

SCROLL FOR NEXT