தமிழ்நாடு

வீராணம் ஏரியின் நீர்மட்டம் 46 அடியாக உயர்வு: ஓரிரு நாளில் நிரம்ப வாய்ப்பு

DIN


வீராணம் ஏரியின் நீர்மட்டம் 46.40 அடியை எட்டியுள்ள நிலையில், அடுத்த ஓரிரு நாள்களில் ஏரி நிரம்ப வாய்ப்புள்ளதாக பொதுப் பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவிலில் அமைந்துள்ள வீராணம் ஏரிக்கு, கல்லணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீரின் ஒரு பகுதி கொள்ளிடம் ஆற்றின் வழியாக கீழணையில் தேக்கப்படுகிறது. கீழணையிலிருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.
வீராணம் ஏரியின் உச்ச நீர்மட்டம் 47.50 அடியாகும். அதாவது, மொத்த கொள்ளளவு ஆயிரத்து 465 மில்லியன் கன அடி. வியாழக்கிழமை (ஆக.9 ) நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 46.40 அடியாக இருந்தது. அதாவது ஏரியில் ஆயிரத்து 197 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது.
கீழணையிலிருந்து வடவாறு வழியாக ஏரிக்கு விநாடிக்கு 920 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதே அளவில் நீர்வரத்து தொடர்ந்தால் ஓரிரு நாள்களில் ஏரியின் நீர்மட்டம் முழுக் கொள்ளளவை எட்ட வாய்ப்புள்ளதாக பொதுப் பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கல்லணையிலிருந்து கீழணைக்கு விநாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீர் வருகிறது. மொத்தம் 9 அடி உயரம் கொண்ட கீழணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை 6.90அடியாக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT