தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர் திறப்பு 1.50 லட்சம் கன அடியாக உயர்வு: 16 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

DIN

காவிரியின் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 1.60 லட்சம் கன அடியில் இருந்து 1.90 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. எனவே மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 1.40 லட்சம் கன அடியில் இருந்து 1.50 லட்சம் கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. 

மேட்டுர் அணையின் நீர்மட்டம் 120.29 அடியாக உள்ளது. அணையில் நீரின் இருப்பு 93.93 டிஎம்சி ஆகும். மேட்டூர் அணையில் நீர் திறப்பு அதிகரிப்பால் காவிரி கரையோரம் அமைந்துள்ள 16 கிராமங்களுக்கு மாவட்ட ஆட்சியர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், 16 கிராம மக்களும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். அதுமட்டுமல்லாமல் கிராம மக்களை தங்க வைக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் தற்காலிகமாக 16 நிவாரண முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

SCROLL FOR NEXT