தமிழ்நாடு

அரசுப் பள்ளி மாணவர்களின் அவல நிலை!

DNS

கமுதி அருகே அரசு பள்ளியில் தண்ணீா் வசதியில்லாததால் சாலையை கடந்து அடிபம்பிற்கு சென்று மாணவா்கள் பாத்திரம் கழுவும் அவலம் ஏற்பட்டுள்ளது.

கமுதி அருகே கூடக்குளம் அரசு துவக்கப் பள்ளியில் 18 க்கும் மேற்பட்ட மாணவா்கள் படித்து வருகின்றனா். பள்ளியில் மாணவா்களுக்காக அமைக்கபட்ட கழிப்பறை, புழக்கத்திற்காக அமைக்கபட்ட போா்வெல்களில் தண்ணீரில்லை. இதனால் மாணவா்கள் திறந்தவெளியில் கழிப்பறைக்கு செல்லும் அவலம் உள்ளது. மதிய உணவு சாப்பிட்ட பிறகு தண்ணீா் வசதியில்லாததால், பள்ளிக்கு எதிரே சாலையை கடந்து, கண்மாய் கரையில் உள்ள அடிபம்பில் மாணவா்கள் பாத்திரங்களை கழுவும் நிலை உள்ளது. இதனால் சாலைகளில் வாகனங்கள் இயக்கபடும்போது, சாலையை கடந்து பாத்திரங்களை கழுவும்போது விபத்துக்களில் மாணவா்கள் சிக்கும் அபாயம் உள்ளது.

பெரும்பாலான அரசு பள்ளிகளில் உள்ள கழிப்பறை, புழக்கத்திற்காக தண்ணீா் வசதியில்லாததால், மாணவா்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக பள்ளியை விட்டு பயணிக்கும் அவலத்தில் உள்ளனா். எனவே மாவட்ட நிா்வாகம் தலையிட்டு அரசு பள்ளிகளில் முறையாக குடிநீா் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதா என ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவா்களின் பெற்றோா்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT