தமிழ்நாடு

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் விவசாயிகளின் உரிமை காக்கப்படும்: அமைச்சர் ஜெயக்குமார்

DIN

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் விவசாயிகளின் உரிமை காக்கப்படும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 
மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் உரிய அழுத்தம் கொடுக்கப்பட்டு விவசாயிகளின் உரிமை காக்கப்படும். கஜா புயல் இழப்பீடு தொகையாக மத்திய அரசு முதற்கட்டமாக 350 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. மேலும் நிவாரணம் கேட்டு பெறப்படும். 

காவிரி உரிமையை பெற்றது அதிமுக அரசு மாநில உரிமையை எந்த விதத்திலும் தமிழக அரசு விட்டுக்கொடுக்காது. மத்திய அரசு மீது, தமிழக அரசு 2 நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை தொடர்ந்துள்ளது திமுக எத்தனை வழக்குகள் தொடர்ந்துள்ளது? எங்களுடைய அடி நேராக நெத்தியடி தான். கொள்கை இல்லாத கூட்டணி எல்லாம் தேர்தல் நேரத்தில் சிதறிவிடும். 

மத்திய அரசை எதிர்த்து வரிகொடா இயக்கம் நடத்த வேண்டும் என ஸ்டாலின் கூறுவது கபட நாடகம். தமிழகத்திற்கு முழுமையாக மொட்டையடித்தவர்கள் வரிகொடா இயக்கம் பற்றி பேசுவது நகைப்புக்குரியது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியுடன் கூட்டணியில் இருந்த ஸ்டாலின் இப்படி கூற கூடாது. வரிகொடா இயக்கம் என்பது இந்திய இறையாண்மைக்கு ஏற்றுக்கொள்ள முடியாத கருத்து. இவ்வாறு அவர் கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுலா சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்: 5 பேர் பலி!

கூலி டீசர்- இளையராஜா காப்புரிமை விவகாரம்: ரஜினி கூறியது என்ன?

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

SCROLL FOR NEXT