தமிழ்நாடு

ஆய்வு என்ற பெயரில் அதிகாரிகளை மிரட்டுகிறார் ஆளுநர்: முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு

DIN


புதுச்சேரி: அரசுத்துறைகளில் ஆய்வு செய்து அதிகாரிகளை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மிரட்டி வருவதாக புதுவை முதல்வர் வே.நாராயணசாமி குற்றஞ்சாட்டியுள்ளார் 

புதுச்சேரியில் அவர் செய்தியாளா்களிடம் பேசுகையில், புதுவை மாநிலத்தில் உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக அனைத்து அரசியல் கட்சி தலைவா்களை அழைத்து கூட்டம் நடத்தினோம். வருகிற டிச.17-ஆம் தேதி எம்எல்ஏக்களை அழைத்து கருத்து கேட்டு தொகுதி வரையறை சம்மந்தமாக முடிவு எடுக்கப்படும்.

அரசு நிர்வாகத்தில் ஆளுநா் தன்னிச்சையாக தலையிடுவதற்கும், உத்தரவிடுவதற்கும் அதிகாரம் கிடையாது. இதனை பல முறை வலியுறுத்தி ஆளுநருக்கு கடிதம் அனுப்பி உள்ளோம். ஆனால், அவரது செயல்பாடுகளில் மாற்றம் இல்லை. 

ஆளுநருக்கு துறை சம்மந்தமாக எதாவது விவரம் வேண்டும் என்றால் எழுத்துப்பூர்வமாக துறை செயலருக்கு அனுப்ப வேண்டும். துறை செயலர் அதனை பரிசீலனை செய்து அமைச்சரின் ஒப்புதலுடன் பதில் அனுப்ப வேண்டும். தவிர, ஆளுநா் கோப்புகளை பார்ப்பதற்கோ, தன்னிச்சையாக துறைகளுக்கு செல்வதற்கோ, தனிப்பட்ட முறையில் உத்தரவிடவோ எந்தவொரு அதிகாரமும் கிடையாது. ஆனால், ஆளுநர் கிரண்பேடி அரசுத்துறைகளில் ஆய்வு செய்து அதிகாரிகளை மிரட்டி வருகிறார் என்றார் முதல்வர் நாராயணசாமி.

ஆளுநரோ, முதல்வரோ, அமைச்சர்களோ வாய்மொழி உத்தரவிட்டால் அந்த உத்தரவை கோப்புகள் மூலமாக துறை தலைவருக்கு அனுப்பி, செயலர் பார்த்து, அதனை தலைமை செயலர் பரிசீலனை செய்து அமைச்சர் கவனத்துக்கு கொண்டு வர வேண்டும்.

முதல்வா் உத்தரவிட்ட பிறகுதான் அதன் நிதிநிலை ஆதாரத்துக்கும், விதிமுறைக்கு உட்பட்டு செயல்படுத்த வேண்டும். இதை மீறினால் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அதிகாரிகளுக்கு கடந்த வாரம் ஒரு ஆணை பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

SCROLL FOR NEXT