தமிழ்நாடு

வடதமிழக கடலோர மாவட்டங்களில் கன மழை எச்சரிக்கை: சென்னை வானிலை மையம்

DIN


சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயல் சின்னமாக மாறும் என்பதால் வட தமிழகக் கடலோர மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது, நேற்று தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த வலுவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி இன்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது சென்னைக்கு 1150 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது.

இன்று இரவுக்குள் இது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். நாளை இது புயலாக வலுப்பெறும் வாய்ப்பும் உள்ளது.

இதன் காரணமாக 15, 16ம் தேதிகளில் வட தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றானது மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் வீசக் கூடும். வட தமிழகக் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக் கூடும்.

டிசம்பர் மாதம் 15, 16ம் தேதிகளில் தென் மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய வங்கக் கடல் பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும், ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருப்பவர்கள் கரைக்கு திரும்புமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலையில்லை: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர்

ரோஷினி ஹரிப்ரியன் போட்டோஷூட்

ட்ரெண்டி உடையில் ஷ்ரத்தா தாஸ் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT