தமிழ்நாடு

ரஜினிகாந்த் மீதான அவதூறு வழக்கு ரத்து

DIN

நடிகர் ரஜினிகாந்த் மீது, சினிமா ஃபைனான்சியர் முகுந்த்சந்த் போத்ரா தொடர்ந்த அவதூறு வழக்கை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. 

சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்த சினிமா பைனான்சியர் முகன்சந்த் போத்ரா, திரைப்பட இயக்குநரும், நடிகர் தனுஷின் தந்தையுமான கஸ்தூரி ராஜாவுக்கு எதிராக செக் மோசடி வழக்கு தொடர்ந்தார். இதுதொடர்பான வழக்கு விசாரணையின் போது நடிகர் ரஜினிகாந்தின் ஒப்புதலை பெற்று தான் கஸ்தூரி ராஜாவுக்கு கடன் கொடுத்தேன் என்று கூறியிருந்தார். இதையடுத்து தன்னிடம் பண பறிக்க முயற்சிப்பதாக ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டார்.

இந்த குற்றச்சாட்டினால் தன்னுடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாக நடிகர் ரஜினிகாந்துக்கு எதிராக கிரிமினல் அவதூறு வழக்கை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் போத்ரா தொடர்ந்தார். ஆனால் இந்த வழக்கின் விசாரணையில் போத்ரா தொடர்ந்து ஆஜராகவில்லை எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் முகன்சந்த் போத்ரா வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் ரஜினிகாந்த் மீது, சினிமா ஃபைனான்சியர் முகுந்த்சந்த் போத்ரா தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எம்.எஸ்.தோனி வெறும் பெயரல்ல... ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்ட சிறப்பு விடியோ!

பார்க்கிங் - 5 மொழிகளில் ரீமேக்!

5ஆம் கட்டத் தேர்தல்: மாலை 5 மணி நிலவரப்படி 56% வாக்குப்பதிவு

மக்களவைத் தேர்தல்: 5-ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

பிரியாவின் சேட்டைகள்!

SCROLL FOR NEXT