தமிழ்நாடு

வாயிலேயே வடை சுடும் டிடிவி தினகரன்: சிரிப்புக் காட்டிய அமைச்சர் ஜெயக்குமார்!

டிடிவி தினகரன் வாயிலேயே வடை சுடுகிறார் என்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நகைச்சுவையாக பதில் அளித்துள்ளார். 

DIN

சென்னை டிடிவி தினகரன் வாயிலேயே வடை சுடுகிறார் என்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நகைச்சுவையாக பதில் அளித்துள்ளார். 

சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்பொழுது  பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த அவர் கூறியதாவது:-

பஸ் கட்டண உயர்வு விவகாரத்தில் திமுக தலைமையில் கட்சிகள் இணைந்து செயல்படுவது என்பனது தமிழக  அரசை வீழ்த்தவே. எத்தனை கட்சிகள் ஒன்று சேர்ந்தாலும் அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது. 

ஹவாலா முறையில் ரூ 20 நோட்டுகளை தொகுதி முழுவதும் கொடுத்து வெற்றி பெற்ற திமிரில் தினகரன் உள்ளார். ஜனநாயகத்தை பற்றி எல்லாம் பேச தினகரனுக்கு தகுதியில்லை. ஸ்டாலினுடன் மறைமுக கூட்டு இருக்கும் காரணத்தினால்தான், அமைச்சர்கள் ஆறு பேரை நீக்க வேண்டும் என்றெல்லாம் தினகரன் பேசுகிறார். தினகரன் வாயிலேயே வடை சுடுகிறார். டிடிவி தினகரனுடன் இனி எந்த சமரச முயற்சியும் கிடையாது.

வேலை இல்லாதவர்கள் பக்கோடா போட்டு விற்பனை செய்யலாம் என்ற பாஜக தலைவர் அமித் ஷாவின் கருது குறித்து கேட்கப்பட்டதற்கு, எப்படி இருந்தாலும் சுய வேலைவாய்ப்பு என்பது ஊக்கப்படுத்த வேண்டிய ஒன்று என்று அமைச்சர் ஜெயக்குமார் பதில் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுகவிற்காக வாக்குக் கேட்பேன்! விஜய் நாகரிகமாகப் பேச வேண்டும்! ஓபிஎஸ் பேட்டி

பிகார்: ராகுல் பேரணியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு!

பிரணவ் மோகன்லாலின் ஹாரர் பட டீசர்!

திரிபுரா அணியில் இணையும் விஜய் சங்கர்! 13 ஆண்டுக்குப் பின் தமிழக அணியிலிருந்து விலகல்!

நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு! ஐடி ஊழியரை தாக்கிய விவகாரம்!

SCROLL FOR NEXT