தமிழ்நாடு

3வது முறையாக விசாரணை ஆணையம் முன் ஆஜரானார் மருத்துவர் பாலாஜி

DIN

சென்னை: ஜெயலலிதா கைரேகை குறித்து விளக்கம் அளிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முன்பு மருத்துவர் பாலாஜி இன்று மீண்டும் ஆஜராகியுள்ளார்.

ஏற்கனவே டிசம்பர் 7 மற்றும் ஜனவரி 25ம் தேதிகளில் விசாரணை ஆணையம் முன்பு, அரசு மருத்துவர் பாலாஜி நேரில் ஆஜராகி விளக்கம் அளித்த நிலையில், இன்று மீண்டும் ஆஜராகியுள்ளார்.

இடைத் தேர்தலின் போது அதிமுக வேட்பாளர்களின் மனுவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கைரேகையை பதிவு செய்த விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. 

ஜெயலலிதாவின் கைரேகையைப் பதிவு செய்த மருத்துவர் பாலாஜி, ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முன்பு, இன்று 3வது முறையாக ஆஜராகி கைரேகை பெற்றது தொடர்பாக விளக்கம் அளிப்பார் என்று கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியன் - 2 வெளியீட்டுத் தேதி இதுதானா?

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

தில்லி அரசு - ஆளுநர் இடையே மீண்டும் மோதல்: மகளிர் ஆணையத்தின் 223 ஊழியர்கள் நீக்கம்!

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT