தமிழ்நாடு

நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம்: மருத்துவர் பாலாஜி 3-ஆவது முறையாக ஆஜர்

DIN

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை ஆணையத்தில் அரசு மருத்துவர் பாலாஜி மூன்றாவது முறையாக புதன்கிழமை ஆஜரானார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தனிநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்த விசாரணை ஆணையத்தில் அரசு மருத்துவர்கள், ஜெயலலிதா, சகிகலாவின் உறவினர்கள், தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலர்கள் உள்ளிட்டோர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்களை அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் விசாரணை ஆணையத்தில் சமர்ப்பித்துள்ளது. மேலும், எம்எல்ஏ தினகரன், அவரது ஆதரவாளர் வெற்றிவேல் ஆகியோரும் ஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக தங்களிடம் இருந்த விடியோ ஆதாரங்களையும் சமர்ப்பித்துள்ளனர்.
3-ஆவது முறையாக அரசு மருத்துவர் பாலாஜி ஆஜர்: ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் இருந்தபோது, மூன்று தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்புமனுக்களில் கைரேகை பெற்ற அரசு மருத்துவர் பாலாஜி கடந்த டிசம்பர் 7-ஆம் தேதி ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். 
இதைத் தொடர்ந்து, சிகிச்சை விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு ஆணையம் உத்தரவிட்டது. இதையடுத்து, அவர் ஜனவரி 25-ஆம் தேதி ஆஜராகி 7 பக்கங்கள் கொண்ட அறிக்கையைச் சமர்ப்பித்தார். 
இந்நிலையில், அவர் 3-ஆவது முறையாக விசாரணை ஆணையத்தில் புதன்கிழமை ஆஜரானார். அவரிடம் சுமார் 2 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. இதையடுத்து, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜெயலலிதாவுக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தேன். இதுதொடர்பான ஆவணங்கள் ஏதும் தாக்கல் செய்யப்படவில்லை என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகனைக் கொல்ல ரூ.75 ஆயிரம் கூலி: கைதான தேடப்பட்ட குற்றவாளி!

தீபக் சஹாருக்கு காயமா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!

கத்தரிப்பூ சேலைக்காரி! மிருணாளினி ரவி...

ஆவேஷம் திரைப்படம் பார்த்து அழுதேன்: இயக்குநர் ஜியோ பேபி

ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு!

SCROLL FOR NEXT