தமிழ்நாடு

தொடக்கக் கல்வி பட்டயத்தேர்வு: விடைத்தாள் நகலை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்

DIN

தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வெழுதிய மாணவர்கள் தங்களது விடைத்தாள்களின் ஒளிநகலை வெள்ளிக்கிழமை (பிப்.16) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசுத்தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அரசுத்தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:-
தமிழகத்தில் கடந்த ஜூன் மாதம் தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வெழுதிய பயிற்சி நிறுவன மாணவர்கள், தனித்தேர்வர்கள் தங்களது விடைத் தாள்களின் ஒளிநகல்களை வெள்ளிக்கிழமை (பிப்.16) முதல் வரும் 20-ஆம் தேதி வரை www.dge.tn.gov.in  என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதைத் தொடர்ந்து விடைத்தாள்களின் ஒளிநகல்களை பெற்ற பாடங்களுக்கு மட்டும் தேர்வர்கள் விருப்பம் இருப்பின் மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு www.dge.tn.gov.in  என்ற இணைய தளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து கொண்டு, பூர்த்தி செய்து அதில் குறிப்பிட்டுள்ள கட்டணத் தொகையை பிப்.21 முதல் பிப்.23-ஆம்தேதி வரை மாவட்ட மாவட்ட ஆசிரியர் கல்வி, பயிற்சி நிறுவனங்களில் நேரடியாகச் செலுத்தி ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
விடைத்தாளின் மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பவர்கள் ஒரு பாடத்துக்கு ரூ.205 செலுத்த வேண்டும். இரு விடைத்தாள் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் ஒரு பாடத்துக்கு ரூ.505 செலுத்த வேண்டும். தேர்வர் வசிக்கும் மாவட்டத்துக்கு அருகில் அமைந்திருக்கும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

இந்தியாவின் முதல் ஊழல், காங். ஆட்சியில்.. -பிரதமர் மோடி

அம்பேத்கருக்கு காங்கிரஸ் ஒருபோதும் உரிய மரியாதை கொடுத்ததில்லை : மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி

ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு மாற்று வீரராக பார்க்கப்பட்டவருக்கு காயம்!

SCROLL FOR NEXT