தமிழ்நாடு

ஏழாவது ஊதியக் குழு முரண்பாடுகளை களைய ஒரு நபர் குழு அமைப்பு

DIN

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட்ட ஏழாவது ஊதியக் குழுவில் உள்ள முரண்பாடுகளைக் களைய ஒருநபர் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.
இதற்கான உத்தரவை நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கே.சண்முகம் திங்கள்கிழமை வெளியிட்டார். அதன் விவரம்:
தமிழக அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்ட ஊதிய உயர்வில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதாகவும் அதைக் களைய வேண்டும் என்றும் அரசு ஊழியர்கள் சங்கத்தினர் முறையிட்டனர்.
இதையடுத்து, ஊதிய முரண்பாடுகளைக் களையும் விதத்தில் ஒரு நபர் குழுவை நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, நிதித்துறைச் செயலாளர் (செலவீனம்) எம்.ஏ.சித்திக் தலைமையில் இந்த குழுவை நியமித்து அரசு உத்தரவிடுகிறது. ஜூலை 31-ஆம் தேதிக்குள் இக்குழுவானது தனது பரிந்துரைகளை அரசுக்கு அளிக்கும் என்று தனது உத்தரவில் நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.சண்முகம் தெரிவித்துள்ளார்.
தேவையற்ற பணியிடங்கள்: தமிழக அரசுத் துறைகளில் தேவையில்லாத பணியிடங்களைக் கண்டறிய குழு அமைக்கப்படும் என்று தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது. அதன்படி, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி எஸ்.ஆதிசேஷையா (அரசின் முன்னாள் முதன்மைச் செயலாளர்) தலைமையில் குழு அமைக்கப்படுகிறது.
நிதித் துறைச் செயலாளர் (செலவீனம்) எம்.ஏ.சித்திக் அந்தக் குழுவின் அலுவல் சாரா உறுப்பினராக இருப்பார் என நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சண்முகம் வெளியிட்ட மற்றொரு உத்தரவில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அயலக தமிழர்கள் பதிவு செய்ய அழைப்பு

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

SCROLL FOR NEXT