தமிழ்நாடு

அதிமுகவின் பெரும்பான்மை எம்எல்ஏக்கள் எங்களைத்தான் ஆதரிக்கின்றனர்: டி.டி.வி. தினகரன்

DIN

அதிமுகவின் பெரும்பாலான சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் எங்களைத்தான் ஆதரிக்கின்றனர் என ஆர்.கே. நகர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார். 
சென்னையில் இருந்து வெள்ளிக்கிழமை மதுரை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியது: 
தகுதி நீக்கம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் 18 சட்டப்பேரவை உறுப்பினர்கள் மீது தொடரப்பட்ட வழக்கு கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து நிலுவையில் உள்ளது. தீர்ப்பு எங்களுக்குச் சாதகமாக வரும். தீர்ப்பு வந்தவுடன் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கூறுவோம். எங்களுக்கு அதிமுக தொண்டர்களின் செல்வாக்கு இல்லை என ஒதுக்கினர். ஆனால் தற்போது 90 சதவீத தொண்டர்கள் எங்களிடம் தான் உள்ளனர். 
சட்டப்பேரவை உறுப்பினர் பிரபு நீண்ட நாள்களாகவே என்னுடன் தொடர்பில் உள்ளார். அவரது மனநிலையே அனைத்து உறுப்பினர்களுக்கும் உள்ளது. சட்டப்பேரவை உறுப்பினர்கள் பெரும்பாலானோர் எங்களை ஆதரிக்கின்றனர். ஆட்சி கலைந்துவிடக்கூடாது என்பதற்காக அங்கு உள்ளனர். தமிழக முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்ட 6 அமைச்சர்கள் தவிர யார் வந்தாலும் நாங்கள் ஏற்றுக்கொள்வோம். அந்த 6 பேர் மீதும் எனக்கு தனிப்பட்ட கோபம் இல்லை. கட்சிக்கு துரோகம் செய்ததால் தொண்டர்கள் அவர்களை ஏற்கமாட்டார்கள். தொண்டர்களும், கட்சியின் பொதுச்செயலர் சசிகலாவும் ஏற்றுக்கொண்டால் நாங்கள் ஏற்றுக்கொள்வோம். நடிகர் கமல்ஹாசன் தற்போதுதான் கட்சி தொடங்கியுள்ளார். எனவே அதுகுறித்து கருத்து எதுவும் கூறமுடியாது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

SCROLL FOR NEXT