தமிழ்நாடு

"பணியாளர், நிர்வாக சீரமைப்பு குழுவை கலைக்க வேண்டும்'

தினமணி

பணியாளர் - நிர்வாக சீரமைப்புக் குழுவை தமிழக அரசு உடனே கலைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநிலத் தலைவர் இரா.சண்முகராஜன் கூறினார்.
 தமிழ்நாடு நில அளவு கணிக வரைவாளர் ஒன்றிப்பு மாநில பொதுக்கூட்டம் கரூரில் சனிக்கிழமை நடைபெற்றது. அதில் பங்கேற்ற பின்னர், இரா.சண்முகராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஊரக வளர்ச்சித் துறை, கூட்டுறவுத் துறை உள்ளிட்ட தமிழக அரசின் பல்வேறு துறைகளில் அதிக அளவில் காலிப்பணியிடங்கள் உள்ளன. புதிய பணியிடங்களும் உருவாக்கப்படவில்லை. இதனால் தற்போது பணியில் உள்ளவர்கள் கூடுதல் பணிச்சுமைக்கு ஆளாகி வருகின்றனர்.
 இந்நிலையில், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிஆதிஷேசய்யா தலைமையில் பணியாளர் - நிர்வாக சீரமைப்பு குழுவை , தமிழக அரசு கடந்த இரு நாள்களுக்கு முன் நியமித்துள்ளது. அந்தக் குழு அரசுத் துறைகளில் தற்போதுள்ள பணியிடங்களை குறைக்கவும், புதிய பணியிடங்களை தனியார், ஒப்பந்த முறையில் நியமித்துக்ù காள்ளவும் உரிய வழிவகை செய்யும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்தக் குழுவை தமிழக அரசு உடனே கலைக்க வேண்டும். இல்லையெனில், ஜாக்டோ-ஜியோகிராப் அமைப்பினர் ஒன்று சேர்ந்து மிகப்பெரிய போராட்டம் நடத்த நேரிடும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT