தமிழ்நாடு

விளம்பரப் பலகை உரிமம் வழங்காததால் அரசுக்கு ரூ.3,750 கோடி வருவாய் இழப்பு

தினமணி

விளம்பரப் பலகை உரிமம் வழங்காததால் அரசுக்கு ரூ.3,750 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
 இதுதொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
 தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தனியாருக்குச் சொந்தமான இடங்களில் விளம்பரப் பலகைகள் அமைப்பதற்கு அனுமதி அளிப்பதற்கான வழிகாட்டுதல்களை வழங்கியது. விளம்பரப் பலகைகளை வழங்கும் அதிகாரம் மாவட்ட ஆட்சியர்களுக்கு அளிக்கப்பட்டிருந்த நிலையில், அதுதொடர்பான விண்ணப்பங்களை ஒற்றைச் சாளர முறையில் பெற்று, ஒரு மாதத்துக்குள் அனுமதி வழங்க வேண்டும் என்று கடந்த 2016-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருந்தது. ஆனால், அதன்பின் ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் இதுவரை விளம்பரப் பலகைகளை அமைப்பதற்காக ஒரு உரிமத்தைக் கூட தமிழக அரசு வழங்கவில்லை. அதுமட்டுமின்றி, சென்னையில் இத்தகைய உரிமம் வழங்கும் அதிகாரம் மாநகராட்சிக்கு மாற்றப்பட்டுள்ளது.
 சென்னை மாநகரம் முழுவதும் பேருந்து நிறுத்த நிழற்குடை அமைத்து அவற்றில் தனியார் விளம்பரங்களை செய்து கொள்ள அனுமதி தரப்பட்டுள்ளது.
 தனியார் நிறுவனங்களில் விளம்பரப் பலகைகளை அமைக்கும் தொழில் மூலமாக மட்டும் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. உரிமம் வழங்க அரசு மறுப்பதால் இந்த 5 லட்சம் பேரின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு வணிகம் நடக்கும் இந்த தொழிலை முடக்கி வைப்பதை அனுமதிக்கக் கூடாது என்று அவர் கூறியுள்ளார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

SCROLL FOR NEXT