தமிழ்நாடு

நாட்டறம்பள்ளியில் கள்ள நோட்டுகள் புழக்கம்?

DIN

நாட்டறம்பள்ளியில் கடந்த சில மாதங்களாக கள்ள நோட்டுக்கள் புழக்கத்தில் உள்ளதால் வியாபாரிகளும், பொதுமக்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். 
நாட்டறம்பள்ளியில் உள்ள வணிக நிறுவனங்கள், ஜவுளி, ஓட்டல், அரசு மதுபானக் கடைகள் உள்ளிட்ட மக்கள் கூட்டம் அலைமோதும் இடங்களில் சமூக விரோதிகள் சிலர் 500 ரூபாய் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடுகின்றனர். இவர்கள், வியாபாரிகளிடம் பணத்தைக் கொடுத்து பொருள்களை வாங்கிக் கொண்டு மீதி சில்லறையாக நல்ல நோட்டுகளைப் பெற்று செல்கின்றனர்.
இதேபோல, அரசு மதுபானக் கடை, பெட்ரோல் விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் கள்ள நோட்டுக்கள் புழக்கத்தில் உள்ளன. 
இவற்றை வியாபாரிகள் வாங்கி வங்கியில் செலுத்தும் போது அவை கள்ள நோட்டுகள் என வங்கி அதிகாரிகள் தெரிவிப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், கள்ள நோட்டுக்களை மீண்டும் கொண்டு வந்தால் காவல் நிலையத்தில் புகார் செய்வோம் என எச்சரிக்கை செய்கின்றனர். இதனால் வியாபாரிகள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, நாட்டறம்பள்ளி பகுதியில் கள்ள நோட்டுகளை புழகத்தில் விடும் கும்பலைப் பிடிக்க அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

திரெளபதி அம்மன் கோயில்களில் அக்னி வசந்த விழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீ மிதித்தனா்

தமிழா்கள் பலமாக இருந்தால்தான் தமிழுக்கு வளம்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

மாணவியின் படத்தை தவறாக சித்தரித்து அனுப்பிய சக மாணவரிடம் விசாரணை

3-ஆவது முறை கோப்பை வென்றாா் ஸ்வியாடெக்

SCROLL FOR NEXT