தமிழ்நாடு

ஜெயலலிதா சிகிச்சை குறித்த ஆவணங்களை தாக்கல் செய்ய அப்பல்லோ நிர்வாகத்துக்கு அவகாசம் 

DIN

ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய அப்பல்லோவுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எழிலகம் கலச மஹால் கட்டடத்தில் விசாரணை ஆணையம் செயல்பட்டு வருகிறது. இதற்கிடையே விசாரணை ஆணையத்தில் ஆஜராவதற்கு அப்பல்லோ நிர்வாகம் 2 வார கால அவகாசம் கோரியிருந்தது. 

இதனை ஏற்ற விசாரணை ஆணையம் அப்பல்லோ நிர்வாகத்துக்கு ஜனவரி 12ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கியுள்ளது. முன்னதாக இன்று விசாரணை ஆணையத்தின் முன் மருத்துவர் சுதா சேஷய்யன் ஆஜராகி விளக்கமளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண் பேசும் வார்த்தை... அதிதி ஷங்கர்!

டி20 உலகக் கோப்பைக்கான ஜாகீர் கானின் இந்திய அணியை தெரிந்து கொள்ள வேண்டுமா?

மோடி ஆட்சியில் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரிப்பு: பிரியங்கா காந்தி

நீலநிற மேகமே... சதா!

பாலிவுட் சுந்தரி..!

SCROLL FOR NEXT