தமிழ்நாடு

தமிழ்நாடு பொன்விழா: பழ.நெடுமாறன் வரவேற்பு

DIN

தமிழ்நாடு பொன்விழா ஆண்டு கொண்டாடப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளதற்கு தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
நமது மாநிலத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டு 50 ஆண்டுகள் ஆவதையொட்டி, தமிழ்நாடு பொன்விழா ஆண்டு கொண்டாடப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளது மகிழ்ச்சியுடன் வரவேற்கத்தக்கது.
சங்க காலத்திலிருந்து 1956-ஆம் ஆண்டு நவம்பர் முதல் நாள் மொழி வழியாகத் தமிழ்நாடு பிரிக்கப்படும் காலம் வரை, தமிழகம் ஒரே நாடாக விளங்கியதில்லை. எனவே தமிழ்நாடு தனி மாநிலமாக உருவான நவம்பர் முதல் நாளை ஆண்டுதோறும் தொடர்ந்து கொண்டாடத் தமிழக அரசு முன்வர வேண்டும். 
பிற மாநிலங்கள் அவை உருவான நாளை மிகச்சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். நாமும் அவ்வாறு கொண்டாட ஆவன செய்யத் தமிழக அரசு முன்வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் - பாகிஸ்தான் தொடர்பு வெளிச்சத்துக்கு வந்தது: பிரதமர் மோடி

‘தள்ளுமாலா’ இயக்குநர் படத்தில் பிரேமலு நாயகன்!

தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை குறைந்துள்ளது: கபில் சிபல்

உதவி ஆணையர், மாவட்ட கல்வி அலுவலர் பணி: டிஎன்பிஎஸ்சி

’வோட் ஜிஹாத்’: காங்கிரஸ் மீது மோடி புதிய குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT