தமிழ்நாடு

மேட்டூரில் ரூ.1 கோடி மதிப்பில் நினைவுத் தூண்

DIN

சேலம் மாவட்டம், மேட்டூரில் தமிழக அரசு சார்பில் ரூ.1கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூணை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சனிக்கிழமை திறந்து வைக்கிறார்.
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு, மத்திய அரசிதழில் தமிழக முன்னாள் முதல் ஜெயலலிதாவின் முயற்சியால் வெளியிடப்பட்டது. 
இதன் நினைவாக மேட்டூர் அணைப் பூங்கா நுழைவுவாயிலின் எதிரில் ரூ.1 கோடி மதிப்பில் நினைவுத்தூண் அமைக்கப்பட்டுள்ளது. இதனை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் திறந்து வைக்கிறார். 
இந்த நிகழ்ச்சியில், பொதுப்பணித் துறை, வருவாய்த் துறைஅதிகாரிகள், சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மேட்டூர் பொதுப்பணித் துறை அதிகாரிகள் செய்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூஜையின் பயன்கள்!

‘வானம்’ ஜாஸ்மின்!

ராகுல் காந்தி, லாலு யாதவ் போட்டியிடுவதை தடுக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

விரும்பியது அருளும் அட்சயபுரீசுவரர்

சுனில் நரைன் கொல்கத்தாவின் சூப்பர் மேன்: ஷாருக்கான்

SCROLL FOR NEXT