தமிழ்நாடு

நடத்துநரில்லா பேருந்துகள் விவகாரம்: போக்குவரத்து செயலருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் 

DIN

நடத்துநரில்லா பேருந்துகளை இயக்கும் முடிவுக்கு எதிரான வழக்கில் போக்குவரத்து செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தமிழகத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் அனைத்தும் பெரும் வருவாய் இழப்பை சந்தித்து, நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. இந்த நஷ்டத்தில் இருந்து போக்குவரத்துக் கழகங்களை மீட்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் ஒரு பகுதியாக நடத்துநரில்லா பேருந்தை இயக்க திட்டமிட்டு கடந்த 5-ஆம் தேதி கோவை, சேலம், மதுரை ஆகிய பகுதிகளில் இந்த சேவை தொடங்கப்பட்டது. 

இந்நிலையில் நடத்துநரில்லா பேருந்துகளை இயக்கும் அரசின் முடிவுக்கு எதிராக போக்குவரத்து ஊழியர்கள் சம்மேளன பொதுச்செயலாளர் ஆறுமுகநயினார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இதுதொடர்பாக போக்குவரத்து செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கை ஜூலை 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT