தமிழ்நாடு

பி.இ. கலந்தாய்வுக்கான அட்டவணை, முக்கிய விவரங்களை வெளியிட்டது அண்ணா பல்கலை

DIN


சென்னை: பொறியியல் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான பி.இ. கலந்தாய்வு அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

ஜூலை 25ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 19ம்  தேதி வரை 5 சுற்றுகளாக பொறியியல் கலந்தாய்வு நடைபெற்றது. 

பொறியியல் படிப்பில் சேர கலந்தாய்வுக்கு விண்ணப்பித்திருந்த பொதுப்பிரிவினருக்கான முதல் சுற்று கலந்தாய்வு ஜூலை 25ம் தேதி தொடங்குகிறது.

ஜூலை 25ம் தேதி தொடங்கும் முதல் சுற்று கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள் இன்று முதல் ஜூலை 24ம் தேதி முதல் வரை கட்டணம் செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் சுற்று கலந்தாய்வு 29ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இரண்டாம் சுற்று கலந்தாய்வு ஜூலை 30ம் தேதி முதல் ஆகஸ்ட் 3ம்  தேதி வரையும், 3ம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 4ம் தேதி முதல் 8ம்  தேதி வரையிலும் நடைபெற உள்ளது.

அதே போல 4ம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 9 முதல் 13ம் தேதி வரையிலும், 5ம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 14 முதல் 19ம் தேதி வரையிலும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தகவல்களை அண்ணா பல்கலையின் https://www.annauniv.edu/ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT