தமிழ்நாடு

மாணவர்கள் தினமும் ஒரு திருக்குறளைக் கற்க வேண்டும்

தினமணி

மாணவர்கள் தினமும் ஒரு திருக்குறளைக் கற்றுக் கொள்ள வேண்டும் என தமிழக அரசின் மொழிபெயர்ப்புத் துறை இயக்குநர் ந.அருள் தெரிவித்தார்.
 ஸ்ரீராம் இலக்கியக் கழகம் சார்பில் "திருக்குறள் விழா-18' என்ற தலைப்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு, ஓவியப் போட்டி டாக்டர் எம்.ஜி.ஆர்-ஜானகி மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு ஸ்ரீராம் சிட்ஸ் தமிழ்நாடு (பி) லிமிடெட் நிறுவனத்தின் பொது மேலாளர் த.ரமேஷ் பார்த்திபன் தலைமை வகித்தார். மக்கள் தொடர்பு அதிகாரி ஜார்ஜ் ஸ்டீபன் வரவேற்றார்.
 இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள், சான்றிதழ்களை வழங்கி தமிழக அரசின் மொழிபெயர்ப்புத் துறை இயக்குநர் ந.அருள் பேசியதாவது: உலகப் பொதுமறையான திருக்குறள் இதுவரை 200-க்கும் மேற்பட்ட மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் அண்மையில், கொரிய மொழியில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டது. 8-ஆம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களும் எளிய முறையில் திருக்குறளைக் கற்றுக் கொள்ள அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. வாழ்வில் சிறந்து விளங்க மாணவர்கள் நாளொரு திருக்குறளைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.
 இந்தப் போட்டியில் 120 பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த 1,500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர் உள்பட மொத்தம் 1,021 பேருக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

கண்டநாள் முதல்..

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது- பள்ளிக் கல்வித்துறை

‘விசில் போடு’ 5 கோடி பார்வைகள்..

நடிகர் விஜய்யின் நிஜ வாழ்க்கை சம்பவம் ‘ஸ்டார்’ படத்துக்கு உத்வேகம்!

SCROLL FOR NEXT