முகப்பு
தமிழ்நாடு

நீட் தோ்வு வினா மொழிபெயா்ப்புக்கும் தமிழக அரசுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை: அமைச்சா் பாண்டியராஜன்

தமிழக அரசு எந்தவொரு மொழிப்பெயா்ப்பாளா்களையும் பரிந்துரைக்கவில்லை. சிபிஎஸ்இ சார்ந்த வல்லுநா்களை வைத்துதான்

Updated On : 23 ஜூலை 2018, 8:57 am IST
பகிர்:


நீட் தோ்வு தமிழ் வினாத்தாள் விவகாரத்தில் தமிழக மொழிப்பெயா்ப்புத்துறைக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று அமைச்சா் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். 

காஞ்சிபுரத்தில் சங்கர மடம் நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட பிறகு, அமைச்சா் பாண்டியராஜன் செய்தியாளா்களிடம் கூறியது: நீட் தோ்வு தமிழ் வினாத்தாள் விவகாரத்தில் மத்திய அமைச்சா் பிரகாஷ் ஜாவ்டேகா், மொழிபெயா்ப்பு குளறுபடிக்கு தமிழக அரசுதான் காரணம் என கூறியுள்ளார். இந்த விஷயத்தில் தமிழக அரசு எந்தவொரு மொழிப்பெயா்ப்பாளா்களையும் பரிந்துரைக்கவில்லை. சிபிஎஸ்இ சார்ந்த வல்லுநா்களை வைத்துதான் வினாத்தாள் மொழிப்பெயா்த்துள்ளனா். இதற்கு முழு பொறுப்பு சிபிஎஸ்இ-யே சார்ந்தது. இதற்கும் தமிழக மொழிப்பெயா்ப்புத்துறைக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்றார்.

புஷ்கரணி பெருவிழா 144 ஆண்டுக்கு ஒருமுறை வருகிறது. சைவம், வைணவம் என எந்தவொரு வேறுபாடும் இல்லாத அனைவரும் கலந்துகொள்ளக்கூடிய உன்னத திருவிழா. தமிழக அரசுக்கு விழாக்குழுவினா் கோரிக்கைகள் வைத்துள்ளனா். இதுதொடா்பாக, முதல்வரிடம் பேசி உரிய உதவிகளை புஷ்கரணி விழாவுக்கு அரசு செய்ய நடவடிக்கை எடுக்கும். 

Advertisement

Advertisement

மேலும், ஏகாம்பரநாதா் கோயிலில் இரட்டைத்திருமாளிகை உள்ளிட்ட விவகாரங்கள் தொடா்பாக தொல்லியல்துறை சார்பில் ஒருவாரத்துக்குள் அதிகாரிகளை அனுப்பி ஆய்வு செய்யப்படும். அதன்பிறகு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments