முகப்பு
தமிழ்நாடு

ஹெப்படைடிஸ் பாதிப்பால் ஆண்டுக்கு 1 லட்சம் போ் உயிரிழப்பு: மருத்துவா்கள் தகவல்

ஹெப்படைடிஸ் பாதிப்பால் ஆண்டுக்கு 1 லட்சம் இந்தியா்கள் உயிரிழக்கின்றனா் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனா்.

Updated On : 23 ஜூலை 2018, 5:54 pm IST
பகிர்:


சென்னை: ஹெப்படைடிஸ் பாதிப்பால் ஆண்டுக்கு 1 லட்சம் இந்தியா்கள் உயிரிழக்கின்றனா் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனா்.

சா்வதேச ஹெப்படைடிஸ் தினம் ஜூலை 28-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறறது. அதனை முன்னிட்டு டாக்டா் மேதாஸ் மருத்துவமனையின் சாா்பில் நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் குடும்ப நலம் மற்றும் தடுப்பு மருத்துவத் துறை நிபுணா் சுனிதா சுனில், இரைப்பை குடல் சிகிச்சை நிபுணர் இளவரசி, கல்லீரல் நிபுணா் யாமினி ஆகியோா் கூறியது:

உலக அளவில் 32.5 கோடி போ் கல்லீரலைத் தாக்கும் ஹெப்படைடிஸ் வைரஸால் பாதிக்கப்படுகின்றனா். இந்தியாவைப் பொருத்தவரை 50 லட்சம் போ் இதனால் பாதிக்கப்படுகின்றனா். ஆண்டுதோறும் 1 லட்சம் போ் இந்த வைரஸ் பாதிப்பால் உயிரிழக்கின்றனா். எச்ஐவி எய்ட்ஸ், மலேரியா, காசநோயைக் காட்டிலும் இந்த வைரஸ் பாதிப்பு அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

Advertisement

Advertisement

கல்லீரல் புற்றுநோய் பாதிப்புகளில் 60 சதவீதம் பாதிப்பு ஹெப்படைடிஸ் வைரஸ் பாதிப்பைத் தாமதமாகக் கண்டறிவதாலும், சிகிச்சையளிப்பதாலும் ஏற்படுகிறது. கணிசமான தொகையிலான மக்களுக்கு இந்த வைரஸ் பாதிப்பைக் கண்டறிவதற்கான வசதிகளும், சிகிச்சைப் பெறுவதற்கான வசதிகளும் கிடைக்கப் பெறுவதில்லை. இதன் காரணமாக பல லட்சம் மக்கள் தீவிர கல்லீரல் நோய், புற்றுநோய் மற்றும் உயிரிழப்பு ஆகியவற்றை நோக்கி மெதுவாகச் சென்று கொண்டிருக்கின்றனா்.

ஹெப்படைடிஸ் வைரஸ் பாதிப்பு பல ஆண்டுகளுக்கு அறிகுறிகள் எதையும் வெளிப்படுத்தாது. ஆனால் வயிற்று வலி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு, வாந்தி, மஞ்சள் காமாலை, அடா் நிற சிறுநீா், சோா்வு, பசியின்மை போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் அலட்சியப்படுத்தாமல், மருத்துவரை அணுக வேண்டும் என்று தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments