தமிழ்நாடு

கருணாநிதியை உயிர்ப்போடு வைத்திருப்பது எது தெரியுமா?: வைரமுத்து 'பிளாஷ்பேக்' 

திமுக தலைவர் கருணாநிதியை உயிர்ப்போடு வைத்திருப்பது எது என்பது குறித்து தனது நூல் வெளியீட்டு நிகழ்வு ஒன்றில் வைரமுத்து பேசியுள்ளார்.

DIN

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை உயிர்ப்போடு வைத்திருப்பது எது என்பது குறித்து தனது நூல் வெளியீட்டு நிகழ்வு ஒன்றில் வைரமுத்து பேசியுள்ளார்.

கவிஞர் வைரமுத்து எழுதிய சிறுகதைகளின் தொகுப்பானது 'வைரமுத்து சிறுகதைகள்’ என்ற தலைப்பில் 10.10.2015 அன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் வெளியிடப்பட்டது. நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய திமுக தலைவர் கருணாநிதி புத்தகத்தின் முதல் பிரதியை வெளியிட, நடிகர் கமல்ஹாசன் அதனைப் பெற்றுக் கொண்டார்.

விழாவில் ஏற்புரையில் வைரமுத்து பேசும் பொழுது கூறியதாவது:

பெரியாருடனும், அண்ணாவுடனும் பல்வேறு தலைவர்களுடனும் அமர்ந்திருந்த கருணாநிதி அருகில் நானும், கமலும் அமர்ந்திருப்பது பெருமை அளிக்கிறது. களைப்பு என்பது உடலுக்கு இருக்கலாம். ரத்தமும், சதையும் ஆனதுதானே உடல். ஆனால், மூளை களைத்துப் போகாது. கருணாநிதிக்கு களைப்பும் வராது

கருணாநிதியை உயிர்ப்போடு வைத்திருப்பது எது தெரியுமா? நம் போன்ற நட்புகள் அல்ல. அவரின் 60 ஆண்டு கால அரசியல் எதிரிகள் தான். எதிரிகள் இல்லை என்றால், வாழ்வில் வெற்றி பெற முடியாது. எதிரிகள் தான் நம்மை உயிர்ப்போடு வைத்திருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் பேசிய போது அரங்கம் அதிர்ந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருணாநிதி நினைவு நாள்: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி!

சிறப்பு உதவி ஆய்வாளா் வெட்டிக் கொலை: என்கவுன்டரில் மணிகண்டன் பலி

கலைஞர் ஒளியில் வெற்றிப் பாதையில் நடைபோடுவோம்! முதல்வர் ஸ்டாலின்

45 வயதைக் கடந்த பெண் காவலா்களுக்கு இரவு நேரப் பணியில் இருந்து விலக்கு

இந்த நாள் இனிய நாள்!

SCROLL FOR NEXT