தமிழ்நாடு

குழந்தைகள் புற்றுநோய் மையப் பிரிவு கூடுதல் கட்டடம் திறப்பு

DIN

அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் புற்றுநோய் மையத்துக்கு 25 படுக்கைகள் கொண்ட கூடுதல் கட்டடம் புதன்கிழமை திறக்கப்பட்டது.
அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் காந்திநகர் மருத்துவமனை வளாகத்தில் மகேஷ் நினைவு அறக்கட்டளையின் சார்பில் 10,000 சதுர அடியில் இந்தக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது.
2009-ஆம் ஆண்டில் இதே அறக்கட்டளை 22 ஆயிரம் சதுர அடியில் 55 படுக்கைகள் கொண்ட கட்டடத்தைக் கட்டிக் கொடுத்தது. அதன் காரணாக அந்தக் கட்டடம் மகேஷ் நினைவு குழந்தைகள் புற்றுநோய் மையம்' என்று பெயரிடப்பட்டது. தற்போது அதே கட்டடத்தில் கூடுதலாக 2 தளங்களுடன் 25 படுக்கைகள் கொண்ட சிகிச்சை அறைகள் கட்டப்பட்டுள்ளன.
இந்தக் கட்டடத்தை மருத்துவமனையின் தலைவர் டாக்டர் சாந்தாவிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், இயக்குநர் மணிரத்னம், முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் டாக்டர் சாந்தா பேசியது: அடையாறு புற்றுநோய் மருத்துவமனை 1954-ஆம் ஆண்டு 12 படுக்கைகள், 2 மருத்துவர்களுடன் தொடங்கப்பட்டது. 
தற்போது 650 படுக்கைகள் வசதி கொண்ட மருத்துவமனையாக உருவெடுத்துள்ளது. இந்த மருத்துவமனையில் 40 சதவீதம் நோயாளிகளுக்கு முற்றிலும் இலவசமாக அல்லது மிகக் குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. 
65 சதவீத குழந்தைகளுக்கு நிவாரணம்: 1950-களில் குழந்தை புற்றுநோய்க்கான சிகிச்சை முறையில் முன்னேற்றங்கள் ஏற்படவில்லை. அப்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் குழந்தைகள் வீடு திரும்புவதே சிரமமாக இருந்தது. 
ஆனால், தற்போது 65 சதவீத குழந்தைகள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புகின்றனர். எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை உள்ளிட்ட நவீன சிகிச்சைகளினால் இது சாத்தியப்பட்டுள்ளது என்றார் டாக்டர் சாந்தா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT