தமிழ்நாடு

சுற்றுச்சூழல் பற்றிப் பேசினாலே தவறு என்பதா?: சேலம் பசுமை வழிச் சாலை திட்டம் குறித்து கமல்ஹாசன் 

DIN

புது தில்லி: சுற்றுச்சூழல் பற்றிப் பேசினாலே தவறு என்பதா என்று சேலம் பசுமை வழிச் சாலை திட்டம் குறித்து புது தில்லியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியைத் துவக்கிய கமல்ஹாசன் அதனை அங்கீகரிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு மனு  செய்திருந்தார். அதற்கான ஆவணங்களையும் அவர் முன்னரே தாக்கல் செய்திருந்தார். அதன் தொடர்ச்சியாக புதனன்று மக்கள் நீதி மய்யதிற்கு முறைப்படி அங்கீகாரம் வழங்கப்படும் என்று தெரிகிறது. அதற்காக அவர் தில்லி வந்துள்ளார். தில்லியில் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

அங்கீகாரம் தொடர்பாக தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்திக்க வந்துள்ளேன். சந்தித்த பின்னரே உங்களிடம் தெரிவிக்க முடியும்.   

சேலம் பசுமை வழிச் சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் கைது செய்யப்படுவது குறித்த கேள்விக்கு அவர், 'எந்தத் திட்டம் என்றாலும் சுற்றுச்சூழல் பற்றிப் பேசினாலே தவறு என்பதா? ஆர்வமும் அக்கறையும் உள்ளவர்களின் கவலைதான் இது. எனக்கும் அதே எண்ணம்தான் உள்ளது' என்று தெரிவித்தார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓ.. கிரேசி மின்னல்...!

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி

மகாதேவ் செயலி மோசடி: 4 நாள்களில் 6 மாநிலங்கள் பயணித்த சாஹில் கான்

வேட்புமனுவை திரும்பப் பெற்று பாஜகவில் இணைந்த காங். வேட்பாளர்!

நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது

SCROLL FOR NEXT