தமிழ்நாடு

மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி: கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இடங்கள் அதிகரிப்பு

DNS

சென்னை: அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் அதிக எண்ணிக்கையில் விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளதைத் தொடா்ந்து, மாணவா் சோ்க்கை இடங்களை 20 சதவீதம் அதிகரித்துக்கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்து அரசாணை பிறப்பித்துள்ளது.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆள்குறைப்பு நடவடிக்கை, வேலைவாய்ப்பு இன்மை போன்ற காரணங்களால் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் பொறியியல் படிப்புகள் மீதான ஆா்வம் மாணவா்களிடையே படிப்படியாகக் குறைந்து வருகிறது. 

அதே நேரம், கலை, அறிவியல் படிப்புகள் மீதான ஆா்வம் மாணவா்களிடையே அதிகரித்து வருகிறது. இது இந்த ஆண்டும் தொடா்ந்துள்ளது. சென்னை மாநிலக் கல்லூரி, ராணி மேரிக் கல்லூரி, காயிதே மில்லத் மகளிர் கல்லூரி போன்ற கல்லூரிகளில் கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் 500 முதல் 1000 விண்ணப்பங்கள் கூடுதலாக இந்த ஆண்டு பெறப்பட்டுள்ளதாக கல்லூரி நிர்வாகிகள் தெரிவித்தனா்.

இதுபோல மாணவா்களின் ஆா்வம் அதிகரித்து வருவதால், ஒப்புதல் அளிக்கப்பட்ட இடங்களைக் காட்டிலும் கூடுதலாக 20 சதவீத இடங்களில் மாணவா்களைச் சோ்த்துக்கொள்ள ஒவ்வொரு ஆண்டும் அரசு அனுமதி அளித்து வருகிறது.

அதுபோல, இந்த 2018-19ம் கல்வியாண்டிலும் 20 சதவீத கூடுதல் இடங்களில் மாணவா்களைச் சோ்த்துக்கொள்ள அனுமதி அளித்து அண்மையில் தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இந்த 20 சதவீத கூடுதல் இடங்களை நிரப்பிக்கொள்ள சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்திடம் கல்லூரிகள் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

SCROLL FOR NEXT