தமிழ்நாடு

கட்சி துவங்கிய பிறகு சென்னையில் முதன்முறையாக பொதுக்கூட்டம் நடத்தப்போகும் கமல்! 

கட்சி துவங்கிய பிறகு சென்னையில் முதன்முறையாக மார்ச் 8-ஆம் தேதி சர்வதேச மகளிர் தினத்தன்று, கமலின் 'மக்கள் நீதி மய்யம்' சார்பில் பொதுக்கூட்டம் நடத்தவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN

சென்னை: கட்சி துவங்கிய பிறகு சென்னையில் முதன்முறையாக மார்ச் 8-ஆம் தேதி சர்வதேச மகளிர் தினத்தன்று, கமலின் 'மக்கள் நீதி மய்யம்' சார்பில் பொதுக்கூட்டம் நடத்தவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய 'மக்கள் நீதி மய்யம்' என்னும் அரசியல் கட்சியினை கடந்த மாதம் 21-ம் தேதி அன்று துவக்கினர். மதுரை ஒத்தக்கடையில் நடந்த மாபெரும் பொதுகூட்டத்தில் கட்சி கொடியை அறிமுகப்படுத்தி, கட்சியின் பெயரையும் அறிவித்தார்.

இந்நிலையில் கட்சி துவங்கிய பிறகு சென்னையில் முதன்முறையாக மார்ச் 8-ஆம் தேதி சர்வதேச மகளிர் தினத்தன்று, கமலின் 'மக்கள் நீதி மய்யம்' சார்பில் பொதுக்கூட்டம் நடத்தவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இந்த பொதுக்கூட்டம் நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பங்குபெறுவோர் பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.

முன்னதாக ஏப்ரல் - 4-ம் தேதி திருச்சியில் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்தபட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!

கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!

பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கப்படும்! அதிமுகவின் 3-ஆம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!

கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!

திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!

SCROLL FOR NEXT