தமிழ்நாடு

பாலிடெக்னிக் முறைகேடு வழக்கை சிபிஐக்கு மாற்றலாமா? நீதிமன்றம் காட்டமான கேள்வி

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு வழக்கை சிபிஐக்கு மாற்றிவிடலாமா என்று எழும்பூர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

DIN


சென்னை: பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு வழக்கை சிபிஐக்கு மாற்றிவிடலாமா என்று எழும்பூர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

பாலிடெக்னிக் விரிவுரையாளர் நியமனத் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்தப் புகார் குறித்து விசாரணை நடத்தி வரும் எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. 

அப்போது, முறைகேட்டில் ஈடுபட்டவர்களிடம் இருந்து இதுவரை ஏன் பணம் பறிமுதல் செய்யப்படவில்லை என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், வழக்கை சிபிஐக்கு மாற்றட்டுமா? என சென்னை மாத்திய குற்றப்பிரிவு  போலீசாரிடம் காட்டமாகக் கேட்டனர்.

பாலிடெக்னிக் விரிவுரையாளர் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், முக்கியக் குற்றவாளி தப்பியோடிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அரசு தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர்கள் நேரடி நியமன எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் 16-இல் நடத்தப்பட்டது. முறைகேடு புகார் காரணமாக இந்தத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது.

 கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் எழுந்ததாக புகார்கள் கூறப்பட்டன. இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் குறைந்த மதிப்பெண் எடுத்திருந்தோருக்கு, மதிப்பெண் பட்டியலில் அதிக மதிப்பெண்கள் அளிக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இந்த விவகாரத்தில் இடைத்தரகர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் கைது செய்யப்பட்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீபாவளிக்காக வீட்டை சுத்தம் செய்தபோது கிடைத்த ரூ. 2 லட்சம்! பழைய ரூ. 2,000 தாள்கள்!

தீபாவளியையொட்டி பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை!

இந்தியா - பாக். உறவை இணைப்போம்: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் டிரம்ப்!

டெஸ்ட் போட்டிகளில் 3000 ரன்களைக் கடந்த மார்க்ரம்!

கரூர் கூட்ட நெரிசல் பலி!: CBI விசாரணைக்கு உத்தரவு | செய்திகள்: சில வரிகளில் | 13.10.25

SCROLL FOR NEXT