தமிழ்நாடு

சின்னாறு வனப் பகுதியில் மழை

DIN

திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள சின்னாறு வனப் பகுதியில் புதன்கிழமை பெய்த மழையால் யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் மகிழ்ச்சி அடை ந்தன.
ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட உடுமலை மற்றும் அமராவதி வனச் சரகத்தில் யானைகள், புலி, சிறுத்தை, மான், காட்டெருமை உள்ளிட்ட நூற்றுக்கணக்கான விலங்கினங்களும், ஆயிரக்கணக்கான பறவைகளும் உள்ளன. இந்நிலையில், கடந்த சில வாரங்களாக வனப் பகுதிக்குள் கடுமையான வறட்சி ஏற்பட்டிருந்தது. இதனால் இந்த விலங்கினங்கள் குடிநீருக்காக கடும் அவதிப்பட்டு வந்தன. 
அடர்ந்த வனப் பகுதிகளில் வாழ்ந்து வரும் இந்த வி லங்கினங்கள் தங்களது குடிநீர்த் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள பல கிலோ மீட்டர் தொலைவு கடந்து திருமூர்த்தி, அமராவதி அணையைத் தேடி வருகின்றன. இதனால், விலங்குகளின் குடிநீர்த் தேவைகளை பூர்த்தி செய்ய வனப் பகுதிக்குள் ஆங்காங்கு தடுப்பணைகள் கட்டப்பட்டன. ஆனாலும், கோடைக் காலத்தில் தடுப்பாணைகளும் வறண்டு போயின.
இந்த நிலையில், சின்னாறு வனப் பகுதிக்குள் புதன்கிழமை நீண்ட நேரம் மழை பெய்தது. இதில் வன விலங்குகள் குறிப்பாக யானைகள் கூட்டம் கூட்டமாக நனைந்து மகிழ்ச்சி அடைந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT