தமிழ்நாடு

சென்னை மருத்துவர் திருவேங்கடத்துக்கு சிறந்த மனிதருக்கான விருது: விஐடி வழங்கியது

DIN

சென்னையில் நோயாளிகளுக்கு குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளித்து வரும் மருத்துவர் வி.திருவேங்கடத்துக்கு தி வீக்எண்ட் லீடர் (பஏஉ ரஉஉஓஉசஈ கஉஅஈஉத) அமைப்பின் சிறந்த மனிதருக்கான விருது புதன்கிழமை அளிக்கப்பட்டது. இதை விஐடி துணைத் தலைவர் ஜி.வி.செல்வம் வழங்கிக் கௌரவித்தார்.
விஐடி பல்கலைக்கழகமும், லீட் ஸ்டார் பத்திரிகையும் இணைந்து வீக்எண்ட் லீடர் (பஏஉ ரஉஉஓஉசஈ கஉஅஈஉத) என்ற அமைப்பை நடத்தி வருகிறது. 
இந்த அமைப்பு சார்பில் ஆண்டுதோறும் சமூக சேவையில் சிறந்து விளங்குவோருக்கு விருது வழங்கிக் கெளரவிக்கப்படுகிறது. அதன்படி, 2017-ஆம் ஆண்டுக்கான சிறந்த மனிதர் விருது, ரூ. 25 ஆயிரம் ரொக்கப் பரிசு ஆகியவை சென்னையில் குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளித்து வரும் மருத்துவர் வி.திருவேங்கடத்துக்கு அளிக்கப்பட்டது.
விஐடி துணைத் தலைவர் ஜி.வி.செல்வம் தலைமை வகித்து மருத்துவர் திருவேங்கடத்துக்கு விருது வழங்கிக் கௌரவித்தார்.
தொடர்ந்து அவர் பேசியதாவது:
விருது பெற்றுள்ள மருத்துவர் திருவேங்கடம் 66 வயது ஆனவராக இருந்தாலும், அவரது இளமையின் வயது 16, அவரது சேவைக்கு 40 வயதாகும். வருவாயை எதிர்பார்க்காமல் சமூகப் பணியில் ஈடுபடுபவர்கள் பலரும் உள்ளனர். அவர்களை கெளரவப்படுத்துவதே சிறந்த பணியாகும். 
கல்வி முடித்து நல்ல நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தவுடன், திருமணம் குழந்தைகள் என இருந்துவிடாமல் மற்றவர்களுக்கு உதவும் வகையில் சமூக சேவைகளில் ஈடுபட வேண்டும். 
அந்த சேவை பல்வேறு வழிகளில் இருக்க வேண்டும். விபத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்ற அனைவரும் முன்வர வேண்டும். விபத்து வழக்குகள் குறித்து தயக்கம் காட்டக் கூடாது. விபத்தில் காயமடைந்தவர்களை எந்த இடத்திலும் சிகிச்சைக்காக சேர்க்கலாம் என்றும், விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்யலாம் என்றும் உள்ளது. 
குறிப்பிட்ட இடத்தில்தான் சேர்க்க வேண்டும் என்பதில்லை. எனவே, பாதிக்கப்பட்டவர்களுக்கு தயங்காமல் உதவ வேண்டும். மத்தியப் பிரதேசத்தில் ஒருவர் மக்களிடம் ரூ. 5, ரூ.10 என பெற்றுக் கொண்டு தடுப்பணை கட்டித் தருகிறார். அதுபோல் அனைவரும் சமூகப்பணி செய்ய முன்வர வேண்டும்.
மேலும், மாணவர்களிடையே புதிய கண்டுபிடிப்புகள் குறித்த ஆர்வம் அதிகரிக்க வேண்டும். கண்டுபிடிப்புகள் மூலம் ஒரு பொருளுக்கான செலவினத்தைக் குறைக்க முடியம். மருத்துவம் சார்ந்த புதிய கண்டுபிடிப்புகள் மருத்துவ சிகிச்சைக்கான செலவினத்தைக் குறைக்கும் என்றார் அவர்.
விருது பெற்ற மருத்துவர் வி.திருவேங்கடம் பேசியதாவது:
சிகிச்சை மூலம் பணம் இல்லாதவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்தில் எனது பணியை செய்து வருகிறேன். பல நேரங்களில் பணம் வாங்காமலும் சிகிச்சை அளிக்கிறேன். அவ்வாறு வாங்கினாலும், அதிகபட்சமாக ரூ. 50 மட்டுமே பெற்றுக் கொள்கிறேன். 
இசிஜிக்கு என்று அதிகளவில் காகிதங்களைப் பயன்படுத்தத் தேவையில்லை. இசிஜி, ரத்தப் பரிசோதனைக்கு ரூ. 10 வசூலிக்கலாம். அதைத்தான் நோயாளிகளிடம் பெறுகிறேன். 
மேலும், நடக்க முடியாத நோயாளிகளின் வீட்டிற்குச் சென்றும் சிகிச்சை அளித்து வருகிறேன். இதுபோன்ற பணிகளை மற்றவர்களும் சேவையாகக் கருதி செய்யலாம். மனிதனுக்கு உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் உடற்பயிற்சி அவசியம். 
நாள்தோறும் குறைந்தது அரை மணிநேரமாவது நடைப்பயிற்சி செய்ய வேண்டும். நடைப்பயிற்சியின் போது வேகமாக நடக்க வேண்டும், அப்படி செய்தால் உடலுக்கு நல்லது என்றார் அவர்.
இதைத் தொடர்ந்து, வீக்எண்ட் லீடர் அமைப்பின் புதிய செயலியை துணைத் தலைவர் ஜி.வி.செல்வம் வெளியிட அதை மருத்துவர் திருவேங்கடம் பெற்றுக் கொண்டார்.
இதில், விஐடி துணைவேந்தர் ஆனந்த் ஏ.சாமுவேல், லீட் ஸ்டார் பத்திரிகை ஆசிரியர் பி.சி.வினோஜ்குமார், விஐடி வணிக மேலாண்மை பள்ளி ஆலோசர் என்.ஜெயசங்கரன், பேராசிரியர்கள் எம்.ராஜேஷ், ஏ.சிவகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

SCROLL FOR NEXT