தமிழ்நாடு

ரஜினியின் ஆன்மிக அரசியல் எடுபடாது: தா.பாண்டியன்

முரளிமணி

ரஜினியின்ஆன்மிக ஆரசியல் தமிழகத்தில் எடுபடாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் கூறினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 12-ஆவது ஈரோடு மாவட்ட மாநாடு, சத்தியமங்கலத்தில் திங்கள்கிழமை தொடங்கியது. தொடர்ந்து 3 நாள்கள் நடைபெறும் இம்மாநாட்டின் முதல்நாள் பேரணியை, எஸ்.ஆர்.டி. கார்னரில் இருந்து பவானிசாகர் முன்னாள் எம்எல்ஏ பி.எல்.சுந்தரம் தொடக்கி வைத்தார்.

பேரணியானது முக்கிய வீதிகள் வழியாகச் சென்று வடக்குப்பேட்டை மாநாட்டுத் திடலைச் சென்றடைந்தது. இதில் ஆயிரக் கணக்கான தொண்டர்கள் கலந்துகொண்டனர். இப்பேரணியை, பவானி ஆற்றுப் பாலம் சந்திப்பில் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் பார்வையிட்டார்.

தொடர்ந்து, வடக்குப்பேட்டையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தா.பாண்டியன் பேசினார். இதில், மாநில துணைச் செயலாளர் கே.சுப்பராயன், பொருளாளர் எம்.ஆறுமுகம், நிர்வாகக் குழு உறுப்பினர் த.ஸ்டாலின் குணசேகரன், மாவட்டச் செயலாளர் கே.ஆர்.திருநாவுக்கரசு, மாநில கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் வி.பி.குணசேகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

சத்தியில் செய்தியாளர்களிடம் தா.பாண்டியன் கூறியதாவது:
 இமயமலையில் ரஜினி ஆன்மிக அரசியல் நடத்தலாம். தமிழகத்தில் அவரது ஆன்மிக அரசியல் எடுபடாது. அதை அவர் விரைவில் புரிந்து கொள்வார். ஆன்மிகம் தேடி வந்த இடத்தில் அரசியல் பேச மாட்டேன் என அவரே கூறியுள்ளார். அரசியல் பேச வேண்டிய இடத்தில் ஆன்மிகமும் பேச மாட்டார். இரண்டையும் பேசினால் அவர் எந்த இடமும் பெற மாட்டார் என்றார்.
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT