தமிழ்நாடு

சிறப்பாக பணியாற்றிய 298 காவலர்களுக்கு முதல்வர் விருது: மாநகர காவல் ஆணையர் வழங்கினார்

DIN


சென்னை: தமிழகத்தில் சிறப்பாக பணியாற்றிய 298 காவலர்களுக்கு சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் 'முதல்வர் காவலர் விருது'களை வழங்கி கௌரவித்தார்.

சட்டம் ஒழுங்கு, ஆயுதப்படை, போக்குவரத்து, குற்றப்பிரிவு உள்ளிட்ட பிரிவுகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக பணியாற்றிய இரண்டாம் நிலை காவலர், தலைமைக் காவலர் என 298 பேர், முதலமைச்சர் காவலர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த விருது வழங்கும் விழா சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் திடலில் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன், 298 காவலர்களுக்கும் விருதுகளை வழங்கி கௌரவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் விருது பெற்ற காவலர்கள், இந்த விருது தங்களுக்கு வழங்கப்பட்டிருப்பது பெருமைகொள்ளச் செய்வதாகவும், தங்களை மேலும் ஊக்கத்துடன் பணியாற்ற வைக்கும் என்றும் கூறினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலையில்லை: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர்

ரோஷினி ஹரிப்ரியன் போட்டோஷூட்

ட்ரெண்டி உடையில் ஷ்ரத்தா தாஸ் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT