தமிழ்நாடு

யாருக்கோ சாமரம் வீசுகிறது தமிழக அரசு: ரத யாத்திரை அனுமதி குறித்து கமல் கருத்து! 

DIN

சென்னை: அரசியல் நோக்கத்துடன் யாருக்கோ சாமரம் வீசுகிறது தமிழக அரசு என்று ராம ராஜ்ய ரத யாத்திரை அனுமதி குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் கருத்து தெரிவித்துள்ளார்.

வி.ஹெச்.பி அமைப்பின் ஆதரவுடன் நடத்தப்படும் ராமராஜ்ய  ரத யாத்திரைக்கு அனுமதி அளித்தது குறித்து தமிழக சட்டப்பேரவையில் இன்று கடும் அமளி ஏற்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்பாட்டம் நடத்திய பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அரசியல் நோக்கத்துடன் யாருக்கோ சாமரம் வீசுகிறது தமிழக அரசு என்று ராம ராஜ்ய ரத யாத்திரை அனுமதி குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செவ்வாயன்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:

சமூக நல்லிணக்கத்திற்காக எழும் நியாயமான குரல்களுக்கு 144 தடை உத்திரவு, கைது. அரசியல் நோக்கத்துடன்  மக்களைப் பிளவுபடுத்தும் ஊர்வலத்திற்கு அனுமதி. மக்கள் மனதைப் பிரதிபலிக்காமல், மாநிலமெங்கும் தேர்வு எழுதக் காத்திருக்கும் மாணவர்களையும் மதியாமல்  யாருக்கோ சாமரம் வீசுகிறது தமிழக அரசு.  

இவ்வாறு அவர் தமிழக அரசினை விமர்சனம் செய்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூஜையின் பயன்கள்!

‘வானம்’ ஜாஸ்மின்!

ராகுல் காந்தி, லாலு யாதவ் போட்டியிடுவதை தடுக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

விரும்பியது அருளும் அட்சயபுரீசுவரர்

சுனில் நரைன் கொல்கத்தாவின் சூப்பர் மேன்: ஷாருக்கான்

SCROLL FOR NEXT