தமிழ்நாடு

எய்ம்ஸ் மருத்துவமனையை நிச்சயம் கொண்டு வருவோம்: முதல்வர்

தினமணி

தமிழகத்துக்கு எப்படியாவது எய்ம்ஸ் மருத்துவமனையை நிச்சயம் கொண்டு வருவோம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேரவையில் உறுதிப்பட தெரிவித்தார்.
 சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் பேசும்போது, "எய்ம்ஸ் மருத்துவனையை செங்கிப்பட்டியில் அமைக்க வேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். ஆனால், வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமார் மதுரையில்தான் அதனை அமைக்க வேண்டும் என்று கூறுகிறார். இதில் எந்த இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது, எப்போது வரும்' என்று கேள்வி எழுப்பினார்.
 அமைச்சர் விஜயபாஸ்கர்: அமைச்சர்களும், சட்டப்பேரவை உறுப்பினர்களும் அவரவர் தொகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் கூறுகின்றனர். தமிழகத்தில் எய்மஸ் மருத்துவமனை நிச்சயம் அமைக்கப்படும்.
 முதல்வர் எடப்பாடி பழனிசாமி: தமிழகத்துக்கு எப்படியாவது எய்ம்ஸ் மருத்துவமனை வர வேண்டும் என்பதுதான் எங்கள் குறிக்கோள். ஏற்கெனவே ஐந்து இடங்களைத் தேர்வு செய்து, அந்த இடங்களை மத்திய குழுவினர் வந்து பார்வையிட்டனர். ஆனால், ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு குறைபாட்டைச் சொன்னார்கள். ஈரோட்டில் தேர்வு செய்யப்பட்ட நிலத்தின் நடுவே சாலை போகிறது என்றும், மதுரையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் குழாய் பதிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தனர். இப்படி ஒவ்வொரு காரணத்தைச் சொல்லி, தமிழகத்துக்கு வர வேண்டிய வாய்ப்பை தட்டிக்கழித்துவிடுவார்களோ என்று கருதிதான், அந்த இடத்தில் 300 ஏக்கர் ஒரே பகுதியில் இருக்கிறது என்று தெரிவித்தோம்.
 ஆனால், அதனை அவர்கள் பரிசீலித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஐந்து இடத்தில் ஏதாவது ஓரிடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு உண்டான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்திக் கொண்டு இருக்கிறோம். தமிழகத்தில் எந்த இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்தாலும் அது பயனுள்ளதாகவே இருக்கும். அதை எப்பாடு பட்டாவது நிச்சயம் கொண்டு வருவோம்.
 துரைமுருகன்: தமிழகத்துக்கு எய்ம்ஸ் மருத்துவமனை வருவது மகிழ்ச்சி. ஆனால், அவர் தொகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்காவிட்டால் வருவாய்த் துறை அமைச்சர் ராஜிநாமா செய்துவிடுவாரோ என எனக்கு வருத்தமாக உள்ளது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

SCROLL FOR NEXT