தமிழ்நாடு

சாலை விதிமீறலுக்கு உடனடி அபராதம்: கோவை காவல்துறை புதிய நடவடிக்கை

Raghavendran

சாலை விதிமீறலில் ஈடுபடுபவர்கள் உடனடியாக அபராதம் செலுத்தும் விதமாக கோவை காவல்துறை இந்த திட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாநகரில் சாலை விதிமீறல் செயல்களில் ஈடுபடுபவர்கள் உடனடியாக அபராதம் கட்டும் விதமாக புதிய திட்டத்தை அம்மாநகர காவல்துறை திங்கள்கிழமை ஏற்படுத்தியுள்ளது.

சாலை விதிமீறல் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு போக்குவரத்து போலீசார், அவர்களின் தண்டனை மற்றும் அபராதம் தொடர்பான ரசீது வழங்குவர். இதையடுத்து சம்பந்தப்பட்டவர்கள் அந்த அபராத தொகையை நீதிமன்றத்தில் குறிப்பிட்ட காலத்துக்குள் செலுத்த வேண்டும்.

இந்நிலையில், பாய்ன்ட் ஆஃப் சேல் எனப்படும் ஸ்வைபிங் இயந்திரத்தை கோவை காவல்துறை திங்கள்கிழமை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் சாலை விதிமீறல் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் போக்குவரத்து காவல்துறையினரிடம் தங்களின் கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி உடனடியாக அபராதத் தொகையை செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள முடியும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

SCROLL FOR NEXT