தமிழ்நாடு

நீட் தேர்வுக்கு வெளி மாநிலங்களுக்கு செல்லும் மாணவர்களுக்கு இலவச ரயில் மற்றும் பேருந்து டிக்கெட் 

நீட் தேர்வு எழுத வெளி மாநிலங்களுக்கு செல்லும் மாணவர்களுக்கு இலவச ரயில், பேருந்து டிக்கெட் மற்றும் உதவித் தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

DIN

சென்னை: நீட் தேர்வு எழுத வெளி மாநிலங்களுக்கு செல்லும் மாணவர்களுக்கு இலவச ரயில், பேருந்து டிக்கெட் மற்றும் உதவித் தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நீட் தேர்வு எழுதுவதற்காக வெளி மாநிலங்களுக்கு செல்லும் தமிழக மாணவர்கள்  மற்றும் அவர்களுடன் உடன் செல்பவர்களுக்கு இலவச ரயில் மற்றும் பேருந்து டிக்கெட் வழங்கப்படும்.

ரயிலில் இரண்டாம் வகுப்பு பயணச் சீட்டு வழங்கப்படும்.

அத்துடன் அவர்களுக்கு தலா ரூ.1000 உதவித் தொகை வழங்கப்படும்.

மாணவர்கள் இந்த தொகையினை அவர்களது பள்ளித் தலைமை ஆசிரியர் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

நீட் தேர்வுக்கான நுழைவுத் தேர்வுச் சீட்டின்  நகல்  மற்றும் பள்ளி அடையாள அட்டையின் அடிப்படையில் இந்த உதவியை பெற்றுக் கொள்ளலாம் 

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

கொலம்பியா முன்னாள் அதிபருக்கு 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை

SCROLL FOR NEXT