தமிழ்நாடு

ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் தீவிரம்: மடத்தூரில் குவிந்த கிராம மக்கள்

DIN


தூத்துக்குடி: தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கிராம மக்கள் நடத்தி வரும் போராட்டம் இன்று தீவிரமடைந்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் காரணமாக சுமார் 2000க்கும் மேற்பட்ட நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றி உள்ள 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மடத்தூரில் ஒருங்கிணைந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கிச் செல்ல முயன்ற  மடத்தூர் கிராம மக்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். தடுப்புகளை அமைத்து கிராம மக்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் தடுத்தி நிறுத்தினர்.

ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றிலும் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது மாவட்ட நிர்வாகம். தூத்துக்குடி பனிமயமாதா தேவாலயத்துக்கு அருகே ஆயிரக்கணக்கான கிராம மக்கள் கூடியுள்ளனர்.

தடையை மீறி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணி செல்ல முயன்ற கிராம மக்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியன் - 2 வெளியீட்டுத் தேதி இதுதானா?

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

தில்லி அரசு - ஆளுநர் இடையே மீண்டும் மோதல்: மகளிர் ஆணையத்தின் 223 ஊழியர்கள் நீக்கம்!

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT