தமிழ்நாடு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்து மீனவர்கள் வேலைநிறுத்தம்

DIN

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்து மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட தூத்துக்குடி மக்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டபோது கலவரம் ஏற்பட்டது. 

கூட்டத்தைக் கலைக்க போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரு பெண்கள் உள்பட 11 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூடு, போலீஸ் தடியடியில் 60-க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். கல்வீச்சில் 15 போலீஸாருக்கு காயம் ஏற்பட்டது. 

துப்பாக்கிச்சூட்டை கண்டித்து இன்று தூத்துக்குடி முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. தூத்துக்குடியிலிருந்து மற்ற மாவட்டங்களுக்குச் செல்லும் அரசு மற்றும் தனியார் போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. 

இந்நிலையில் அங்கு மீனவர்களும் வேலைநிறுத்தப் போராட்டததில் ஈடுபட்டுள்ளனர். இடிந்தகரை, கூத்தேன்குழி, உவரி உள்பட 10 கிராம மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

SCROLL FOR NEXT