தமிழ்நாடு

நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம்

Raghavendran

தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரிக்க, ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்து முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைவராகக் கொண்ட ஒருநபர் விசாரணை ஆணையம் அமைத்து தமிழக அரசு புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது. 

முன்னதாக, தூத்துக்குடியில் செவ்வாய்கிழமை நடைபெற்ற ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதில் காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலருக்கு படுகாயம் ஏற்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையடுத்து அம்மாவட்டத்தில் 25-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு அனைத்து தரப்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரோமியோ ஓடிடி தேதி!

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

சென்னை-மும்பை ரயில்(22160) இன்று 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்

குக் வித் கோமாளியிலிருந்து விலகிய பிரபலம்: இனி இவர்தான்!

SCROLL FOR NEXT