தமிழ்நாடு

மேலடுக்கு சுழற்சி: ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

DIN

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி வியாழக்கிழமை கூறியது:
தென் மேற்கு வங்கக்கடலில் தென் தமிழக கடற்கரையையொட்டி, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதுதவிர, வடக்கு உள்கர்நாடகம் முதல் தென் தமிழகம் வரை காற்றழுத்தத் தாழ்வு நிலை காணப்படுகிறது.
இதன் காரணமாக, தமிழகத்தில் சில இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு உள்ளது. ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது.
சிவகங்கையில் 90 மி.மீ. மழை: தமிழகத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிவகங்கையில் 90 மி.மீ. மழை பதிவானது. வெப்பநிலையைப் பொருத்தவரை, திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருச்சி, பெரம்பலூர், கரூர் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் 100 டிகிரி முதல் 104 டிகிரி வரை வெப்பநிலை காணப்பட வாய்ப்பு உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

SCROLL FOR NEXT