தமிழ்நாடு

தூத்துக்குடியில் இணைய சேவை: நாளைக்குள் ஆய்வு செய்து முடிவெடுக்க உயர் நீதிமன்ற கிளை உத்தரவு  

தூத்துக்குடியில் இணைய சேவை வழங்குவது குறித்து நாளைக்குள் ஆய்வு செய்து முடிவெடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

DIN

மதுரை: தூத்துக்குடியில் இணைய சேவை வழங்குவது குறித்து நாளைக்குள் ஆய்வு செய்து முடிவெடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது, கிராம மக்கள் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இதைத் தொடர்ந்து தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் இணைய சேவை துண்டிக்கப்பட்டது.

இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிமன்றத்தில் துப்பாக்கிச் சூடு தொடர்பான வழக்கு வெள்ளியன்று விசாரணைக்கு வந்த போது, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஏன் இணையதளத்தை முடக்கினீர்கள் என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து, நெல்லை, கன்னியாகுமரியில் மீண்டும் இணைய சேவை வழங்கப்படும் என்றும், இணையதள சேவை முடக்கத்தை ரத்து செய்தது தொடர்பாக இரு மாவட்ட ஆட்சியர்களுக்கும், தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கும் தமிழக அரசு கடிதம் எழுதியிருப்பதாகவும், தூத்துக்குடியில் மட்டும் இணைய சேவை முடக்கம் தொடரும் என்றும் கூறியது.

இந்நிலையில் தூத்துக்குடியில் இணைய சேவை வழங்குவது குறித்து நாளைக்குள் ஆய்வு செய்து முடிவெடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை தற்பொழுது இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போவோமா ஊர்கோலம்... அஹானா கிருஷ்ணா!

மரகதப் பறவை... பிரணிதா சுபாஷ்!

உனக்காக என் மனைவியைக் கொன்றேன்! பல பெண்களுக்கு அனுப்பிய பெங்களூரு டாக்டர்!!

TVK Vijay full speech - முதல்வருக்கு சில கேள்விகள்! | TVK | Vijay

இதையெல்லாம் நம்பாதீங்க... ராஜாசாப் படக்குழு அறிக்கை!

SCROLL FOR NEXT