தமிழ்நாடு

காடுவெட்டி குரு மரணம்: ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

தினமணி

சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினரும், வன்னியர் சங்கத் தலைவருமான காடுவெட்டி ஜெ.குரு மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு.திருநாவுக்கரசர் உள்ளிட்டத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
 ராமதாஸ் (பாமக): எனது வாழ்வில் எத்தனையோ இழப்புகளை எதிர்கொண்டு இருக்கிறேன். அவை அத்தனையும் தாண்டிய பெருஞ்சோகம் குருவின் மறைவுதான். அவரிடம் ஒரு பணியை ஒப்படைத்தால் அதை செய்து விட்டுதான் அடுத்த பணிக்கு செல்வார். அறிமுகமான நாளில் இருந்து கடைசி மூச்சு விடும் நாள் வரை எனது நம்பிக்கைக்குரிய தளபதியாகத் திகழ்ந்தவர்.
 அன்புமணி (பாமக): குரு காலமானார் என்பதை நம்ப முடியவில்லை. எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து என் மீது அளவில்லா அன்பு காட்டி, அக்கறை செலுத்தியவர்களில் அவர் குறிப்பிடத்தக்கவர். என்னை அரசியலுக்கு அழைத்து வந்தவர்களில் அவர் முக்கியமானவர். எதிர்பாராத அவரது இந்த மறைவை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
 அதிமுக (ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி கே.பழனிசாமி): உடல்நலக் குறைவால் காடுவெட்டி குரு மரணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றோம். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், பாமகவினருக்கும் எங்களது ஆழ்ந்த அனுதாபங்கள்.
 மு.க.ஸ்டாலின் (திமுக): உடல்நலக் குறைவால் காடுவெட்டி குரு காலமானார் என்ற செய்தி கேட்டு துயரமுற்றேன். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
 தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் காடுவெட்டி குரு மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT