முகப்பு
தமிழ்நாடு

தீபாவளி: சென்னைக்கு நாளை முதல் 4,207 பேருந்துகள் இயக்கம்

தீபாவளி முடிந்து, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் சென்னைக்குத் திரும்ப வழக்கமாக இயக்கப்படும் 2,275 பேருந்துகள் உள்பட வரும் 10 -ஆம் தேதி வரை

Updated On : 6 நவம்பர் 2018, 2:24 am IST
பகிர்:

தீபாவளி முடிந்து, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் சென்னைக்குத் திரும்ப வழக்கமாக இயக்கப்படும் 2,275 பேருந்துகள் உள்பட வரும் 10 -ஆம் தேதி வரை 4,207 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
தீபாவளிப் பண்டிகையையொட்டி, பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல ஏதுவாக, சென்னையிலிருந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு வெள்ளிக்கிழமை முதலே சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து, தீபாவளிப் பண்டிகை முடிந்து, பொதுமக்கள் சென்னைத் திரும்ப ஏதுவாக புதன்கிழமை (நவ.7) முதல் சனிக்கிழமை (நவ.10) வரை வழக்கமாக இயக்கப்படும் 2,275 பேருந்துகள் உள்பட 4,207 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. 
நாளை 3,663 பேருந்துகள் இயக்கம்: அதன்படி, புதன்கிழமை வழக்கமாக இயக்கப்படும் 2,275 பேருந்துகள் உள்பட 1,388 சிறப்புப் பேருந்துகளை இணைத்து 3,663 பேருந்துகள் பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு இயக்கப்படுகின்றன.
இதேபோன்று வியாழன், வெள்ளி, சனிக்கிழமைகளில் முறையே 887, 765, 1,165 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. 
மாநகர சிறப்புப் பேருந்துகள்: தங்களது சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்பும் மக்கள், தாங்கள் வசிக்கும் நகரின் பிற பகுதிகளுக்குச் செல்ல ஏதுவாக சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் தாம்பரம், பெருங்களத்தூர், கோயம்பேடு, பூந்தமல்லி, மாதவரம் ஆகிய பகுதிகளில் இருந்து 250-க்கும் மேற்பட்ட சிறப்பு இணைப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. 
இவற்றுடன் மினி பேருந்துகள் எனப்படும் சிறிய ரக பேருந்துகளும் இயக்கப்படவுள்ளதாக மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிற ஊர்களுக்கும்: சென்னையை தவிர்த்து பிற முக்கிய ஊர்களுக்கும் பிற பகுதிகளில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. அதாவது தீபாவளிக்கு மறுநாளான புதன்கிழமை 2,350 சிறப்புப் பேருந்துகளும், வியாழக்கிழமை - 1,450, வெள்ளிக்கிழமை -1,475, சனிக்கிழமை 2,360 என மொத்தம் 7,635 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
இதில் முக்கியமாக மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, சேலம், தஞ்சாவூர் போன்ற பகுதிகளில் இருந்து பிற முக்கிய நகரங்களுக்கு இந்தச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments