தமிழ்நாடு

பாலியல் பேர வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி கருப்பசாமி, முருகன் மனு

DIN

பாலியல் பேர வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி உதவி பேராசிரியர் முருகன், முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் வியாழக்கிழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
 அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி மாணவிகளிடம் பாலியல் பேரம் பேசியதாக அக் கல்லூரியின் உதவிப் பேராசிரியை நிர்மலாதேவி, மதுரை காமராஜர் பல்கலைக்கழக உதவிப்பேராசிரியர் முருகன், பல்கலை. முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
 மூவரும் மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீதான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகளிர் விரைவு அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இவ்வழக்கு வியாழக்கிழமைவிசாரணைக்கு வந்தபோது நீதிபதி லியாகத் அலி முன்னிலையில் மூவரும் ஆஜர் படுத்தப்பட்டனர்.
 அப்போது முருகன், கருப்பசாமி ஆகியோரை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி அவர்களது தரப்பு வழக்குரைஞர்கள் மனு தாக்கல் செய்தனர். மனுக்களை விசாரித்த நீதிபதி, வழக்கு விசாரணையை வரும் 12 ஆம் தேதி (திங்கள்கிழமை) ஒத்தி வைத்தார். இதனையடுத்து மூவரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மதுரை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT