தமிழ்நாடு

அரசியலுக்கு வராத ரஜினி குறித்து விமர்சனம் செய்வது தேவையற்றது: மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை

DIN

அரசியலுக்கு வராத ரஜினி குறித்து விமர்சனம் செய்வது தேவையற்றது என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கரூர் அருகே செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
ஈழத்தமிழர்களை காப்பாற்ற முடியாத திமுகவால் இந்தியாவை எப்படி காப்பாற்ற முடியும்?. மதவாத அரசியல் எனக்கூறும் திமுக, கம்யூனிஸ்ட் அன்று பாஜகவை காப்பாற்றின, இன்று எதிர்ப்போம் என கூறுகின்றன. 

தற்போது தேர்தலுக்காக கம்யூனிஸ்டுகளுடன் இணைந்து இந்தியாவை வலிமையாக்குவோம் என திமுக கூறுகிறது. அரசியலுக்கு வராத ரஜினி குறித்து விமர்சனம் செய்வது தேவையற்றது. ஜெயலலிதா சிலை முன்பே திறக்கப்பட்டுவிட்டது, தற்போது சிலையை மாற்றிதான் வைக்கிறார்கள். சிலை திறப்பு நிகழ்ச்சிக்கு அழைப்பு வந்தது.

மக்களிடம் மனு பெறும் நிகழ்ச்சி இருந்ததால் பங்கேற்க முடியவில்லை.  மக்களவை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக தனித்துப் போட்டி, கூட்டணிக்கு ஒத்த கருத்துள்ளவர்கள் வந்தால் தேர்தல் நேரத்தில் முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியன் - 2 வெளியீட்டுத் தேதி இதுதானா?

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

தில்லி அரசு - ஆளுநர் இடையே மீண்டும் மோதல்: மகளிர் ஆணையத்தின் 223 ஊழியர்கள் நீக்கம்!

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT